வேளாண்மை போற்றும் தாய்மை
கதிரவனை வழிபட்டு
கதிர்விளைச்சலுக்கு களமிறங்க
திட்டம் போதும் விவசாயி
சித்திரை மாதத்தில்…
வைகறையில் எழுந்து
வயலுக்கு புறப்படும்
விவசாயி
வைகாசி மாதத்தில்….
ஆனிவேறாய் நின்று
கடினஉழைப்பினை
வெளிப்படுத்தும்
விவசாயி
ஆனி மாதத்தில்…
ஆசைஆசையாய்
வளர்த்த மாடுகளை
ஏறுஉழவு செய்வதற்காக
களமிறங்க
தயார்படுத்தும்
விவசாயி
ஆடிமாதத்தில்
தாவணி அணிந்த
பெண்களை
சேற்றில் இறங்கச்செய்தும்
நாற்றில் நடவைத்தும்
பெண்ணியத்தைக்காத்தும்
குலதொழிலை
செழிக்கச்செய்யும்
விவசாயி
ஆவணி மாதத்தில்…..
நாற்று நட்ட
நெல் மணிகளை கண்ணும்கருத்தோடும்
பாதுகாவலனாய் காக்கும்
விவசாயி
புரட்டாசி மாதத்தில்…
மழையினை வேண்டி
வருணபகவானை
அழைக்கும்
விவசாயி
ஐப்பசி மாதத்தில்…
கார்த்திகை தீப ஒளி போல
வரிசை வரிசையாய்
நெல்மணிகளைப்பார்த்து
ஆரவாரத்தோடும்
நெகிழ்ந்துபோகும்
விவசாயி
கார்த்திகை மாதத்தில்….
பனிப்போர்வையால் போர்த்தப்பட்ட
நெல்மணிகளை
பனியினை உருக வைப்பதற்காக
பகலவனை இறைத்துதியால்
துதித்து
அழைக்கும்
விவசாயி
மார்கழி மாதத்தில்…..
நெற்கதிரினை அறுவடை செய்தும்
நெல்மணிகளை அரிசிகளாக்கியும்
பொங்கலோடும் !!! தித்திக்கும்
செங்கரும்போடும் !!!
இவ்வுலகினை தன்
கதிரியினால்
பிரகாசிக்கச்செய்யும்
ஆதவனுக்கு படைக்கும்
விவசாயி
தை மாதத்தில்….
சேயைக்காண்பதற்கு
தாய் காத்திருக்கும் மாதங்கள்
“பத்து”
விளைநிலத்தில்
விளையும் பயிரினை காண்பதற்கு
விவசாயி காத்திருக்கும் மாதங்கள்
“பத்து”
எனினும்
தாயின் மகத்துவமும்
விவசாயின் மகசூலும்
ஒன்றே !!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக