வெள்ளி, 15 மே, 2020



வாழ்க்கையை வாழ்வதற்காக 

பேனாவை நேசிக்கிறேன்,
எழுத்துக்கள் எழுவதற்காக !
எழுத்துக்களை
நேசிக்கிறேன்,
வார்த்தைகள்
வாக்கியமாவதற்காக !
வார்த்தைகளை
நேசிக்கிறேன்,
கவிதைகளை
வாசிப்பதற்காக !
கவிதைகளை
நேசிக்கிறேன்,
சிந்தனைகள்
பெருக்குவதற்காக !
சிந்தனைகளை
Iநேசிக்கிறேன்,
புன்னகைகளை
அள்ளுவதற்காக !
புன்னகைகளை
நேசிக்கிறேன்,
உற்சாகம்
பிறப்பதற்காக !
உற்சாகத்தை
நேசிக்கிறேன்,
வாழ்க்கையை
வாழ்வதற்காக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...