சனி, 16 மே, 2020

பெண்களின் ஆற்றல்

பெண்ணே! பெண்ணே !!
தோல்வியினை நினைத்து 
தாழ்ந்து விடாதே
காலமெல்லாம் காத்திருக்கும் 
புதுயுகத்தை படைக்க 
புதுமையாக எழுந்து  வா ! பெண்ணே...

பெண்ணே ! பெண்ணே !!
அவமானத்தை நினைத்து 
வீழ்ந்து விடாதே 
காலமெல்லாம் சிந்தும் 
கண்ணீர்த் துளியினை 
சிந்தனையினால்  துடைக்க 
சிட்டாக பறந்து வா ! பெண்ணே...

பெண்ணே ! பெண்ணே !!
ஏமாற்றத்தை நினைத்து 
நொந்து விடாதே 
காலமெல்லாம் ஏமாற்றும் 
மனிதனிடத்தில்  ஏணியாக 
உயர்ந்து வா! பெண்ணே....

பெண்ணே ! பெண்ணே !!
அடிமையினை நினைத்து 
அடிபணிந்து விடாதே 
காலமெல்லாம் அடிமைசங்கிலியினை 
அகிலமெங்கும் 
உடைத்தெறிந்து வா ! பெண்ணே... 

பெண்ணே ! பெண்ணே !!
வஞ்ச ப்புகழ்ச்சியினை   நினைத்து 
புகழ்ந்து விடாதே 

காலமெல்லாம் வஞ்சிக்கப்படும் 
மனிதனிடத்தில் புகழின் 
கொடியினை நிலை நாட்ட வா ! பெண்ணே.... 

இனிய பெண்கள் தினம் நல்வாழ்த்துக்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...