உலகம் பேசும் கிளி
அன்னக்கிளியே சொல்லடி !உன்
ஆதாயங்கள் என்னவென்று கூறடி !
இனிமையாக பழகினேனடி ஈகைக்குணத்துடன் வாழ்ந்தேனடி !
உண்மையாக இருந்தேனடி !
ஊமையாக மாறிவிட்டேனடி !
எண்ணங்கள் மாறியதை பாருடி !
ஏமாற்றங்கள் பெருகியதை பாருடி !
ஐந்தறிவு கூட இல்லையடி !
ஒவ்வொரு மனதினை பார்த்தாயாடி !
ஓங்கி வளர்ந்த அதர்மத்தை பார்த்தாயாடி !
ஔவையார் நீதிகளை மறந்ததன் ஏனடி !
அஃதே சிந்தித்தேனடி !
மாறிவிட்டது உலகமடி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக