பிரியா விடை
சின்ன தம்பி யானை
யார் வழியில்
குறுக்கிடாமல்
யாம் மட்டும்
குடும்பமாக
யாசித்தும் நேசித்தும்
வாழ்ந்து வந்தோம்
யார் கண்பட்டதோ
என்று தெரியவில்லை
என் குடும்பத்தை
காணவில்லை
தெரிந்தும் தெரியாத
இடமெல்லாம் தேடினேன்
எங்கும் கிடைக்கவில்லை
பாச வலியில் துடித்த நான்
வழியரியாமல் ஊருக்குள்
வந்தேன்
என் பசிக்கு யாரையும் பஞ்சம் பார்த்ததில்லை
கிடைப்பவையெல்லாம் தின்றேன்
என் ருசிக்கு யாரையும் துன்புறுத்துவதில்லை
கிடைத்ததோ திரும்பி விடு-என்று
வராதே !வராதே!! வஞ்சனையில்
மரத்துப்போகிறது
மனிதனின் நெஞ்சத்தில்
ஐந்தறிவு படைத்த என்னை
ஆறறிவு படைத்த மனிதமிருகங்கள்
எம் வாழ்விடத்தை விட்டு
போக சொன்னார்கள்
கதறினேன் அழுதேன்
என் கண்ணீர் துடைக்க யாருமே
வரவில்லை
போக மறுத்தேன்
கிள்ளையில் உடைந்தது
என் தந்தங்கள்
கில்லாமல் உடைந்தது
என் நெஞ்சங்கள்....
மீண்டும் வந்தேன்
மனிதர்களை கண்டவுடன்
பதறியதோ நெஞ்சம்
அலறியதித்து தஞ்சமடைய
ஓடினேன் ஓடோடினேன்
தஞ்சமடைய என் இடமெல்லாம்
பிளாட்டாகவும்
காடுகள் பல வீடாகவும்
கானல் நீராகி
கால் கடுக்காமல்
தேடினேன் தேடினேன்
ஒளிவதற்கு காட்டை நோக்கி,
காணவில்லை எங்கும் தென்படவில்லை
ஒதுங்கி போய்
ததும்பி நின்றேன்
போக வேண்டியது நீங்கள் தான் மனிதா
இறைவன் அளித்த காட்டை
இரக்கமே இல்லாமல் அழிக்க
யார் அதிகாரம் கொடுத்தது?
ஏன் இந்த சர்வாதிகாரம்?
யார் தந்தது?
உன் சுயநலத்தில்
என் சுதந்திரத்தை
ஏன் பறித்தாய்?
நான் ஏன் போக வேண்டும் மனிதா
நினைத்துக்கொண்டேன்
நாடோடியாக சுற்றி வந்த
நினைவில் நின்றவேயெல்லாம்
கண்ணில் தெரியவே
கண்கலங்கி தெளித்துக்கொண்டேன்
கலி முற்றியதோ
களிரின் குமுறல்கள்
இப்படிக்கு,
சின்னத்தம்பி யானை...........
குறுக்கிடாமல்
யாம் மட்டும்
குடும்பமாக
யாசித்தும் நேசித்தும்
வாழ்ந்து வந்தோம்
யார் கண்பட்டதோ
என்று தெரியவில்லை
என் குடும்பத்தை
காணவில்லை
தெரிந்தும் தெரியாத
இடமெல்லாம் தேடினேன்
எங்கும் கிடைக்கவில்லை
பாச வலியில் துடித்த நான்
வழியரியாமல் ஊருக்குள்
வந்தேன்
என் பசிக்கு யாரையும் பஞ்சம் பார்த்ததில்லை
கிடைப்பவையெல்லாம் தின்றேன்
என் ருசிக்கு யாரையும் துன்புறுத்துவதில்லை
கிடைத்ததோ திரும்பி விடு-என்று
வராதே !வராதே!! வஞ்சனையில்
மரத்துப்போகிறது
மனிதனின் நெஞ்சத்தில்
ஐந்தறிவு படைத்த என்னை
ஆறறிவு படைத்த மனிதமிருகங்கள்
எம் வாழ்விடத்தை விட்டு
போக சொன்னார்கள்
கதறினேன் அழுதேன்
என் கண்ணீர் துடைக்க யாருமே
வரவில்லை
போக மறுத்தேன்
கிள்ளையில் உடைந்தது
என் தந்தங்கள்
கில்லாமல் உடைந்தது
என் நெஞ்சங்கள்....
மீண்டும் வந்தேன்
மனிதர்களை கண்டவுடன்
பதறியதோ நெஞ்சம்
அலறியதித்து தஞ்சமடைய
ஓடினேன் ஓடோடினேன்
தஞ்சமடைய என் இடமெல்லாம்
பிளாட்டாகவும்
காடுகள் பல வீடாகவும்
கானல் நீராகி
கால் கடுக்காமல்
தேடினேன் தேடினேன்
ஒளிவதற்கு காட்டை நோக்கி,
காணவில்லை எங்கும் தென்படவில்லை
ஒதுங்கி போய்
ததும்பி நின்றேன்
போக வேண்டியது நீங்கள் தான் மனிதா
இறைவன் அளித்த காட்டை
இரக்கமே இல்லாமல் அழிக்க
யார் அதிகாரம் கொடுத்தது?
ஏன் இந்த சர்வாதிகாரம்?
யார் தந்தது?
உன் சுயநலத்தில்
என் சுதந்திரத்தை
ஏன் பறித்தாய்?
நான் ஏன் போக வேண்டும் மனிதா
நினைத்துக்கொண்டேன்
நாடோடியாக சுற்றி வந்த
நினைவில் நின்றவேயெல்லாம்
கண்ணில் தெரியவே
கண்கலங்கி தெளித்துக்கொண்டேன்
கலி முற்றியதோ
களிரின் குமுறல்கள்
இப்படிக்கு,
சின்னத்தம்பி யானை...........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக