சனி, 16 மே, 2020

பொங்கல் கவிதை


நஞ்சை நிலத்தில்
நல்லதொரு விடியலைத் தேடி 
நம் நெஞ்சங்களை இனிமையாய்
எத்திக்கும் நம் சொந்தங்களோடு
எண்ணமெல்லாம் நிறைவேற
தஞ்சம் அடைய
வருகிறதோ
இந்த பொங்கல்....

புதியதாய் உதயமாகி
புனிதமாய் உதயமாகும்
புன்சிரிப்பாய் உதயனோடு

பொங்கலை கொண்டாடுவோம்
பொன்னான சந்தோசங்களை

என்றும் நிலைத்திருக்க
எண்ணமெல்லாம் ஈடேற

எந்த சூழ்நிலையிலும்
மனம் மாறாத
அள்ள அள்ள அமுதாய்
அனைவரும் ஒன்று கூடி

பகைமையை மறந்து
பல்லாண்டு சிறந்து

வசந்த விடியலை
வாழ்க்கையின் விடிவெள்ளி
என்றென்றும்
ஒளிவீச  ஒளிமயமான
எதிர்காலத்தை நோக்கி

அமைதியை நிலைநிறுத்தி
ஆனந்தத்தை உயர்த்தி
பேரானந்தமாய்

பெரியதாய் மதிக்கப்படும்
பெருமை பொங்கலை
பேரின்பம் மாறாமல்
கொண்டாடுவோம்...
இன்பங்களை
பரிசளிப்போம்

வாழ்வெல்லாம்
இனிப்பாய்
மாறுவதற்காக....

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Man Of Woman



Man is equal to Wife Of MAN
 W- wisdom in nature 
 I-Interpersonal in Nature  
 F-Friendly in nature 
 E-Elegant in Nature

Common with pictures




கவிதைகள்



கூடியிருக்கும் போது 
வருவதில்லை 
தனிமையில் 
வருகின்றாள் 
சிந்தனைதுளியாய்…. 


வினாவின் வருகைக்காக 
 கனவாய் 
விடையளிக்க வருகிறது 
கற்பனையாய்
கவியுலகை  ஆள  வருகின்றது கவிநடையில்

இழந்த சிந்தனைகள்



இழப்பிற்கு 
பின்னால் தான் 
இழந்த சிந்தனைகள் 
இலட்சிய சாதனைகளாக 
முன்னால் தானே 
மலரும் . 

வரதட்சணை




பெண்ணே ! 
உமது கற்பின் 
மகத்துவத்திற்கு
ஈடாகுமோ 
இந்த 
லட்ச அர்ச்சனைகள் 
லட்சார்ச்சனை

மனிதனின் வாழ்நாள்


1,00,00,000  ரூபாய் கிடைத்தது
சமூகம் தரும் அந்தஸ்தில் !
10,00,000 ரூபாய் கிடைத்தது
உறவுகள் தரும் விசுவாசத்தில் !
1,00,000 ரூபாய்   கிடைத்தது
 எதிரிகள் தரும் போலிநடிப்பில் !
10,000  ரூபாய் கிடைத்தது
 குடும்பம் தரும் சந்தோஷத்தில் !
1000  ரூபாய் கிடைத்தது
ஆடம்பரம் தரும் பூரிப்பில் !
100 ரூபாய் கிடைத்தது
நண்பர்கள் தரும் உல்லாசத்தில்!
10  ரூபாய் கிடைத்தது
உணர்வுகள் தரும் உற்சாகத்தில் !
1 ரூபாய்  கிடைத்தது
சாம்பல் தரும் நெற்றிப்பொட்டில் !

True love and care

My கவிதை
.................
நினைக்க! நினைக்க !!
வருகிறது
உன்னோடு  நெஞ்சம்  !
பார்க்க !பார்க்க !!
வருகிறது
உன்னோடு  விடியல்    !
ருசிக்க !ருசிக்க !!
வருகிறது
உன்னோடு  புன்னகை !
வாசிக்க !வாசிக்க !!
வருகிறது 
உன்னோடு சுவாசம் !
நடக்க ! நடக்க !!
வருகிறது
உன்னோடு தேடல்
மறக்க !மறக்க!!
வருகிறது
உன்னோடு நானும்!
என்னோடு நீயும் !!
உயிரின் ஒளியாக
உணர்வின் ஒலியாக
உரைக்க! உரைக்க !!
உலகத்திற்கு
உணர்த்துவோம்
நம்
உண்மையான காதலை !!!

பெண்களின் ஆற்றல்

பெண்ணே! பெண்ணே !!
தோல்வியினை நினைத்து 
தாழ்ந்து விடாதே
காலமெல்லாம் காத்திருக்கும் 
புதுயுகத்தை படைக்க 
புதுமையாக எழுந்து  வா ! பெண்ணே...

பெண்ணே ! பெண்ணே !!
அவமானத்தை நினைத்து 
வீழ்ந்து விடாதே 
காலமெல்லாம் சிந்தும் 
கண்ணீர்த் துளியினை 
சிந்தனையினால்  துடைக்க 
சிட்டாக பறந்து வா ! பெண்ணே...

பெண்ணே ! பெண்ணே !!
ஏமாற்றத்தை நினைத்து 
நொந்து விடாதே 
காலமெல்லாம் ஏமாற்றும் 
மனிதனிடத்தில்  ஏணியாக 
உயர்ந்து வா! பெண்ணே....

பெண்ணே ! பெண்ணே !!
அடிமையினை நினைத்து 
அடிபணிந்து விடாதே 
காலமெல்லாம் அடிமைசங்கிலியினை 
அகிலமெங்கும் 
உடைத்தெறிந்து வா ! பெண்ணே... 

பெண்ணே ! பெண்ணே !!
வஞ்ச ப்புகழ்ச்சியினை   நினைத்து 
புகழ்ந்து விடாதே 

காலமெல்லாம் வஞ்சிக்கப்படும் 
மனிதனிடத்தில் புகழின் 
கொடியினை நிலை நாட்ட வா ! பெண்ணே.... 

இனிய பெண்கள் தினம் நல்வாழ்த்துக்கள்...

பெண்கள்


வெள்ளி, 15 மே, 2020

பொங்கல் திருநாள்


தமிழனின் பங்களிப்பு 
வீரம்
தமிழ்மக்களின் உபசரிப்பு 
அன்பு
தமிழ்மொழியின் மொழிபெயர்ப்பு   
ஒற்றுமை 
தமிழ் மரபின் வரவேற்பு 
கொடை 
தமிழரின் படைப்பு 
அறிவு 
எத்திசையில் வாழும் 
தமிழ் சொந்தங்களுக்கும் 
தித்திக்கும் பந்தங்களுக்கும் 
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்… 



வானமே எல்லை 
எல்லைகளுக்கெல்லாம் 
எல்லை உண்டோ 
உன் 
எல்லையினை 
தொடுவதற்கு…


வாழ்க்கை 

எண்ணங்களை 
வண்ண வண்ண 
மலரொடும் 
மனதிற்கு இனிய 
நாரோடும் 
மணம் 
மாறா மாலையாக 
தொகுப்பது 
தான் 
வாழ்க்கை
தாயும் சேயும் 

நேசித்த இதயம் 
நேசிக்கின்ற இதயத்தை 
எப்போதும் 
நேசிக்கும் 
நேசமுள்ள வரை….. 

எத்தனையோ பூக்கள் 
இவ்வுலகில் 
பூத்தாலும் 
நீ மட்டும் தான் 
என் 
மழலை
பாடும்  பாக்கள்….

இடுகாடு grave yard




 

சாதிகள் இங்கில்லை 
சமத்துவம் பிறக்கின்றது 
மண்ணுலகத்தை விட்டு 
விண்ணுலகம் செல்லும்
சடலங்களில் 

பணம்




இருக்கிறவன் 
இல்லாதவன் 
இயலாதவன் 
இருக்கும் 
இவ்வுலகினில் 
இமை மூடாமல்
இவ்வுலகை 
வலம்  வருபவன் 
என்றும் 
என்றென்றும் 
இயல்பானவன் 

வறுமை




பரிசுக்காக ஓடினேன் 
ஓட்டப்பந்தயத்தில் !!
ஒரு பதம்  சோறுக்காக 
ஓடினேன் 
வாழ்க்கை பயணத்தில் !!!



கலியுகம் 

ஒரு மனிதன்
இன்னோரு மனிதனின் 
வாழ்வினை 
கெடுத்துக்கொள்வதையே
உயர் லட்சியமாகக்கொண்டு 
உன்னதமாக நிலைநாட்டிக்கொண்டு 
வாழ்வதேயே 
மாமனிதன் என்கிறது 
இன்றைய யுகம்
கலியுகம்….




தோல்விகள் பல தழுவினாலும்
நாம் வெற்றி பெறும் வரை
நமக்கு வழிகாட்டும் மிகச்சிறந்த
தோழனாய்
இன்ப துன்பங்களில்
பகிர்ந்து கொண்டு
 கடைசி வரை
தோள் கொடுப்பது
தோல்வியே!!!!!!!!!!


Too much of knowledge
Which leads to give confusion
when you over think
Just in while
Too much of love
which leads to give possessiveness
when You  get attraction
Just in while
Too much of sweets
which leads to give diabetus
when You  tasty
just in while
Too much of emotions
Which leads to give sensational
When You shedding tears
Just in while
Too much of worries
which leads to give Hyper tension
When you imagine
Just in while
Too much of over confidence
which  leads to gives Failure
When You over build up
Just in while
Too much of  trust worthy
which leads to give fools
When you believe.
Just in while
Whenever You crossed limits
too much will happens
justin while..


மனிதனின் ஆயுள்  காலங்கள்

உயிரை விட மேலானது 
நம் 
பெயரை மட்டும் 
கொண்டு செல்கிறோம்
காலனின் பிடியில் 
நம் 
இறுதி காலங்கள்…



பிரிவின் வலிகள் 

என் குடையாக இருந்த 
உன்னை 
காற்றில் தவற தவறவிட்டேன் 
இன்று 
கண்ணீர் மழையில் 
நனைந்து செல்கிறேன் 
உன்  நினைவலையைத்தேடி……. 


சர்வதேச வேட்டி  தினம் 

ஒவ்வொரு தமிழனின் 
     வெள்ளை மனம் 
ஒன்றாக இணைந்தது 
       இன்று 
பாரம்பரிய உடையினில்
(சர்வதேச வேட்டி தினம்
கடிகாரம்

ஓயாமல் உழைக்கிறேன் 
ஒய்வு எடுக்க நேரமில்லை !!
ஒய்வு எடுக்க செல்கையில்
ஓய்ந்து போகிறது சுவாசமில்லை


தன்னம்பிக்கை 

நம்பியவர்களின் 
நம்பிக்கை 
நம்பியவர்களை 
நாடிச்செல்கிறது 
நம் கையில் 
சிட்டுகுருவியின் மௌன மொழிகள்
குருவியின் குரலோசை


என் இனங்களை 
கண்டு
கொள்வதுமில்லை !
என்  இனிமையான
கானங்களை
கேட்பதுமில்லை !
என்
சொந்தங்களை
இணைக்கும்
பந்தங்களை

இவ்வுலகை
இணைக்கும்
இணையம்
வளர்ச்சிக்காக

என்
இணை பிரியா
இனங்களை இமைக்கும்
நேரத்தில்
கொல்வது

எவ்வகையில்
நியாயம்?
அவ்வகையில்
என்னை
நிற்காதியான
சொந்தங்களை கண்டு
நியாயம் கேட்பதற்கு
யார் யாரோ வருவதுமில்லை
யாரிடம் சொல்வது


என்னை
யாசிக்க
யாருமே இல்லை
என்பதனை
யாம் என்ன
செய்தோம்?
எண்ணற்ற
சேதிகளை
அளிப்பதற்கு
என்னருமை
நாதிகளை
அழிப்பதற்கு
யார் காரணம்?


வேளாண்மை போற்றும் தாய்மை 

கதிரவனை வழிபட்டு 
கதிர்விளைச்சலுக்கு களமிறங்க 
திட்டம் போதும் விவசாயி 
சித்திரை மாதத்தில்… 

வைகறையில் எழுந்து 
வயலுக்கு புறப்படும் 
விவசாயி 
வைகாசி மாதத்தில்…. 

ஆனிவேறாய் நின்று 
கடினஉழைப்பினை 
வெளிப்படுத்தும் 
விவசாயி 
ஆனி மாதத்தில்… 

ஆசைஆசையாய் 
வளர்த்த மாடுகளை  
ஏறுஉழவு செய்வதற்காக 
களமிறங்க 
தயார்படுத்தும் 
விவசாயி 
ஆடிமாதத்தில் 

தாவணி அணிந்த  
பெண்களை 
சேற்றில் இறங்கச்செய்தும்
நாற்றில்  நடவைத்தும் 
பெண்ணியத்தைக்காத்தும் 
குலதொழிலை 
செழிக்கச்செய்யும் 
விவசாயி 
ஆவணி மாதத்தில்…..

நாற்று நட்ட 
நெல் மணிகளை  கண்ணும்கருத்தோடும் 
பாதுகாவலனாய் காக்கும் 
விவசாயி 
புரட்டாசி மாதத்தில்… 

மழையினை வேண்டி 
வருணபகவானை 
அழைக்கும்
விவசாயி 
ஐப்பசி மாதத்தில்… 
  
கார்த்திகை தீப ஒளி போல
வரிசை வரிசையாய் 
நெல்மணிகளைப்பார்த்து 
ஆரவாரத்தோடும் 
 நெகிழ்ந்துபோகும் 
விவசாயி
கார்த்திகை மாதத்தில்….

பனிப்போர்வையால் போர்த்தப்பட்ட 
நெல்மணிகளை 
பனியினை   உருக வைப்பதற்காக 
பகலவனை இறைத்துதியால்  
துதித்து 
அழைக்கும் 
விவசாயி 
மார்கழி மாதத்தில்…..

நெற்கதிரினை  அறுவடை செய்தும் 
நெல்மணிகளை அரிசிகளாக்கியும் 
பொங்கலோடும் !!! தித்திக்கும்
செங்கரும்போடும் !!!
இவ்வுலகினை தன் 
கதிரியினால் 
பிரகாசிக்கச்செய்யும் 
ஆதவனுக்கு படைக்கும் 
விவசாயி 
தை மாதத்தில்…. 

சேயைக்காண்பதற்கு 
தாய் காத்திருக்கும் மாதங்கள் 
       “பத்து”
விளைநிலத்தில் 
விளையும் பயிரினை  காண்பதற்கு 
விவசாயி காத்திருக்கும்  மாதங்கள் 
      “பத்து”

எனினும் 
தாயின் மகத்துவமும் 
விவசாயின் மகசூலும் 
ஒன்றே !!!!!

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...