நஞ்சை நிலத்தில்
நல்லதொரு விடியலைத் தேடி
நம் நெஞ்சங்களை இனிமையாய்
எத்திக்கும் நம் சொந்தங்களோடு
எண்ணமெல்லாம் நிறைவேற
தஞ்சம் அடைய
வருகிறதோ
இந்த பொங்கல்....
புதியதாய் உதயமாகி
புனிதமாய் உதயமாகும்
புன்சிரிப்பாய் உதயனோடு
பொங்கலை கொண்டாடுவோம்
பொன்னான சந்தோசங்களை
என்றும் நிலைத்திருக்க
எண்ணமெல்லாம் ஈடேற
எந்த சூழ்நிலையிலும்
மனம் மாறாத
அள்ள அள்ள அமுதாய்
அனைவரும் ஒன்று கூடி
பகைமையை மறந்து
பல்லாண்டு சிறந்து
வசந்த விடியலை
வாழ்க்கையின் விடிவெள்ளி
என்றென்றும்
ஒளிவீச ஒளிமயமான
எதிர்காலத்தை நோக்கி
அமைதியை நிலைநிறுத்தி
ஆனந்தத்தை உயர்த்தி
பேரானந்தமாய்
பெரியதாய் மதிக்கப்படும்
பெருமை பொங்கலை
பேரின்பம் மாறாமல்
கொண்டாடுவோம்...
இன்பங்களை
பரிசளிப்போம்
வாழ்வெல்லாம்
இனிப்பாய்
மாறுவதற்காக....
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்





